திமுக.. முன்பை விட இப்போது அதிக “கான்பிடன்ஸ்”…. அந்த கருத்து கணிப்பு தான் காரணமா..!

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில். திமுக முன்பை விட இப்போது அதிக கான்பிடன்ஸில் இருக்கிறதாம்.. கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்டது போல பல மூத்த நிர்வாகிகள் உள்ளனராம். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு, வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு.. தற்போது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, வலிமையான கூட்டணியோடு தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஏபிபி சி வோட்டர் கணிப்புகள், டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு, நக்கீரன் கருத்து கணிப்பு என்று திமுகவிற்கு ஆதரவாக நிறைய கணிப்புகள் வந்துள்ளன. அதிலும் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 160+ இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றெல்லாம் கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இது திமுக தரப்பை உற்சாகப்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் திமுகவில் சில நிர்வாகிகள் இப்போதே தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டது போலவும், வெற்றி உறுதியாகிவிட்டது போலவும் உற்சாகத்தில் உள்ளனர். கடைசி பாலில் மேட்சை முடிக்கும் முன்பே. வென்றுவிட்டது போல வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் குதிப்பார்கள்.

அப்படித்தான் திமுக நிர்வாகிகள் சிலர் உற்சாகத்தில் இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஏன் தலைமை நிர்வாகிகள் சிலரும் கூட வெற்றி உறுதி என்ற நினைப்பில்தான் உள்ளனர்.

திமுக இப்படி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில்தான் அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்டமான டிஜிட்டல் கடிகாரம் ஒன்றை வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வர இன்னும் இத்தனை நாட்களே உள்ளது என்று அந்த டிஜிட்டல் கடிகாரத்தில் கவுன் டவுன் ஓடிக்கொண்டு இருக்கிறது. திமுக தனது வெற்றி உறுதியாக இருப்பதால் தான் இப்படி கவுண்டன் எல்லாம் போடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

திமுகவிற்கு வந்த ரிப்போர்ட் ஒன்றுதான் இந்த மாற்றத்திற்கு காரணமாம். கண்டிப்பாக திமுக 150+ இடங்களில் வெல்லும் என்று திமுக மூலம் 3வது பார்ட்டி ஒருவரிடம் கொடுத்து எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த ரிப்போர்டுக்காக பல ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. நிறைய சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்பின்பே திமுக 150+ இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்று கருத்து கணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுகவின் இந்த திடீர் நம்பிக்கைக்கு காரணம் என்கிறார்கள். அதே சமயம் வேறு சில திமுக நிர்வாகிகளோ.. திமுக இப்போதே வெற்றிபெற்றது போல செயல்பட கூடாது. இன்னும் தேர்தல் முடியவில்லை அதிமுகவும் வலிமையாகத்தான் இருக்கிறது.

2016லும் இதே போலத்தான் திமுக வெற்றிபெற்றுவிடுவோம் என்ற மிதப்பில் இருந்தது. ஆனால் அதில் திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மட்டுமே மாற முடிந்தது. அதேபோல் மீண்டும் நடக்க கூடாது. ரிப்போர்ட், கருத்து கணிப்புகளை நம்பாமல், திமுக தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!