காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்–உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தரை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும்–உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும்மான க.சுந்தர் அவர்களை ஆதரித்து சாலவாக்கம் பஜார் வீதியில் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.முன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் தாரப்பட்டையுடன் உற்சாகத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது வாக்குகளை சேகரித்த வைகோ அவர்கள் கழக தலைவர் அவர்கள் கூறிய 7 உறுதிமொழிகளை எடுத்துரைத்து வேட்பாளர் சுந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்–தேர்தல் பொறுப்பாளர் ஜி.செல்வம்,மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தலைவர்பாசறை செல்வராஜ்,திமுக ஒன்றிய செயலாளர் டி.குமார்,ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தோழர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.