பெரியகுளம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் கிராமங்களின் முக்கிய பிரச்சனைகளை தெரிவித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி கொடுத்து தீவிரப்பிரச்சாரம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் தனது பரப்புரையை பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன் பட்டியில் இருந்து துவங்கி ஜெயமங்களம், மேல்மங்களம், வடுகபட்டி, தாமரைக்குளம், கைலாசபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
கிராமங்களின் முக்கிய பிரச்சனைகளை கூறியும், திமுகவின் தேர்தல் அறிக்கையை செய்து முடிப்பேன என வாக்குறுதி கொடுத்து தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது மேல்மங்கள், ஜெயமங்களம், வடுகபட்டி பகுதியில் உள்ள வராகநதி ஆற்றின் குறுக்கே விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக்கொடுப்பதாகவும் வடுகபட்டியில் முக்கிய தொழிலாக உள்ள வெள்ளைபூண்டு வியாபாரிகள் அதிக அளவில் GSTயால் பாதிக்கப்பட்டு வருவதால் திமுக ஆட்சிக்கு வந்த உடன் வெள்ளைப்பூண்டு வியாபாரிகளுக்கு GST வரி குறைப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறிதி கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்றனர்.