துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூதிப்புரம் பேரூராட்சிப் பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான பூதிப்புரம் பேருராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2015-16ன் கீழ் ரூ.20 இலட்சம் மற்றும் பொதுநிதி ரூ.18.30 இலட்சம் என ரூ.38.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூதிப்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலக கட்டிடம் ஆகியவைகளை திறந்து வைத்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் குறுகிய கால பயிர்க்கடனுதவியும், 3 பயனரிகளுக்கு ரூ.6.50இலட்சம் மதிப்பீட்டில் ஆடுகள் வளப்பிற்க்கான கடனுதவியும் என ரூ.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்pட்ட உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட வாழையாத்துப்பட்டி பகுதியில் கட்டப்பட்டுவரும் இரயில்வே கீழ்ப்பாலம் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, இதில் இப்பகுதி பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கென எந்தவித இடையூறு ஏற்ப்படாத வகையில், கூடுதல் பாதை வசதி ஏற்ப்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .பல்லவி பல்தேவ தேனி பாராளுமன்ற உறுப்பினர் .ரவீந்திரநாத் அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் ப்ரிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எம்.ஏகாம்பரம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) காளியப்பன், உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்); ராஜாராம், போடிநாயக்கனூர் வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Translate »
error: Content is protected !!