தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல், வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.
துணை முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், ஆகியோர் முன்னிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் புயல், வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழகத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில்,இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே புரவி புயல் நிலை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட 99 கண்மாய்களில் 26 கண்மாய்களும், உத்தமபாளையம் பெரியாறு வைகை வடிநில உப கோட்டத்திற்குட்பட்ட 36 கண்மாய்களில் 3 கண்மாய்களும் நிறைந்துள்ளது. பொதுபணித்துறை, நெடுஞ்சாலைதுறை (தேசிய மாநில) மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், நீர் நிலைப் புறம்போக்கு மற்றும் நீர் செல்லும் வாய்க்கால் அல்லது ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பொதுப்பணித்துறையினரும் மற்றும் வருவாய்த் துறையினரும் பாலங்கள், சிறுபாலங்கள் மற்றும்
வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும், பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக தூர்வாரப்பட்டு, வெள்ளத்தினால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திடவும், மழைக்காலங்களில் பெறப்படும் நீரினை வீணாக்காமல் முறையாக சேமித்திடவும், உள்ளாட்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரினை குளோரினேற்றம் செய்யப்பட்டு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புகள் ஏற்படக்கூடிய முல்லைபெரியாறு நீர் பிடிப்பு பகுதிகள், ஆற்றங்கரைப்பகுதிகள், நீர்நிலைகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடன், முன் எச்சரிக்கையுடன் இருக்கவும், குறிப்பாக கம்பம் மெட்டு, போடி மெட்டு, மலைக்கிராம சாலைகளில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்லவும், எதிர்பாரத விதமாக மலைச்சாலைக்களில் மண் சரிவு ஏற்படின், அதனை உடனடியாக சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ளவும், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரங்களை தயார் நிலையில் வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்க, நீச்சல் வீரர்கள், நாரிழை படகுகள் மற்றும் பரிசல்கள், மீட்கக் கூடிய உபகரணங்கள், மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படின் அதற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவுப்பொருள்கள், பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், காலி சாக்கு பைகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Attachments area