தேனியில் 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகள் – ஓபிஎஸ் வழங்கினார்

தேனி,

தேனி மாவட்ட அளவில் பணிபுரிகின்ற 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகளை தேனியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் .

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சிப் பகுதியில் கலெக்டர் .பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவில் அவர் முதற்கட்டமாக 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகளை வழங்கினார்.

தேனியில் மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் சலுகை விலையில் வீட்டுமனை பட்டாக்கள் வேண்டி நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில் தமிழ்நாடு துணை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கலெக்டரின் மேலான நடவடிக்கையின்படி அக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் தேனி வட்டம் கொடுவிலார்பட்டி உள்வட்டம் சத்திரபட்டி கிராமத்தில் உள்ள அரசு நிலத்தினை பத்திரிக்கையாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் சந்தை மதிப்பீட்டு தொகையை செலுத்துவது மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக மாவட்ட அளவில் பணிபுரியும் 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இவ்விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித் தலைவர் .ப்ரிதா, மாவட்ட வருவாய் அலுவலர் .ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .செந்தில்அண்ணா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.எம்.சையதுகான், ஆர்.பார்த்திபன், பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!