தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர்கள் மத்தியில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர், கைகளில் பதாகைகளை ஏந்தியபடி இன்று விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். சாலைகளில் சென்று கொண்டிருந்த பொதுமக்களிடம் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு கோவை கல்லூரி.. கல்வி இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

Translate »
error: Content is protected !!