தேர்தல் விதிமீறல் குறித்த அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – கிருஷ்ணனுண்ணி பேட்டி

தேனி மாவட்டத்தில் 306 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது.

தேர்தல் விதிமீறல் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேட்டி.

தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உளளது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் மற்றும் வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையத்தால் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளதுஅதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளும் அமுலுக்கு வந்தது.

இந்நிலையில் தேர்தல் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் என்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் 576 இடங்களில் 1561 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1221 முதன்மை வாக்குச்சாவடிகள் 340 துணை வாக்குச்சாவடிகள் உள்ளன.

தேர்தல் குறித்த புகார்களை 1950 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு தகவல் அளிக்கலாம், இதற்காக 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படும். மாவட்டத்தில் 306 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அதற்கு நுண்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டள்ளது. தோராயமாக 24 ஆயிரம் வாக்காளர்கள் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என கண்டறியப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவான வசதிகள் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

மாவட்டத்தில் 2008 கன்ட்ரோல் யூனிட் 2702 பேலட் யூனிட்கள்,  2091 விவி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்தமிழகதுணை முதல்வர் .பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் அறிவித்த பின்பும் விதிமுறைகளை பின்பற்றாமல்  அத்தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் வேஷ்டிசேலை, கறி விருந்து வழங்கி வருகிறார்கள்.

இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று திமுக., தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தேனி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தேனி மாவட்ட ஆட்சியர்தேர்தல் ஆணைய விதிமுறைகள் அமலில் உள்ள காலம் வரை தேர்தல் விதிமீறல் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்என தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!