ராமநாதபுரம் தொகுதியை பாஜக வுக்கு ஒதுக்கியதை கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டனின் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு, அதிமுக தலைமை ஒதுக்கி அறிவித்ததை கண்டித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, இரவு 10 மணிக்கு மேல் ராமேஸ்வரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். இதே போல தற்போது பாம்பன் பாலத்தில் அவருடைய விசுவாசிகள் சாலையில் படுத்து
உருண்டு அதிமுக தலைமைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர் இந்த தொகுதியை மீண்டும் அதிமுக ஒதுக்கி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மணிகண்டனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்
மேலும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை பாரதீய ஜனதா கட்சிக்கு தொகுதியை பரிசீலனைக்கு உட்படுத்தி மறு ஆய்வு செய்து அதிமுவுக்கே ஒதுக்கி மீண்டும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் மணிகண்டனுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும்,
திரும்பப் பெறாவிட்டால், கட்சியிலிருந்து அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் விலக போவதாகவும், உறுப்பினர் அட்டைகளை தீ வைத்து எரிக்க போவதாகவும் பாஜகவை தோற்கடிக்க போவதாகவும் முழக்கமிட்டனர். இதில்,பெண் ஆதரவாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.