கமல்: வாங்க நாட்டாமை..
சரத்: வணக்கம் வேலு நாயக்கரே..கூட்டணி பத்தி பேசிடலாம்னு இவரையும் கையோட கூட்டிட்டு வந்திருக்கேன்…
கமல்: யாரிந்த தொப்பி போட்ட தம்பி..?
சரத்: அட..நல்லா பாருங்க…அது தொப்பி இல்லே..விக்கு..நம்ம IJK தலைவர் ஏரி வேந்தர்.. சாரி..பாரி வேந்தர்..
கமல்: இப்படி ஒரு கட்சி இருக்கா?..ABC நீ வாசினு நான் பாடின மாதிரி.. IJK ..என்னை பண்றியே ஹைஜாக்கேன்னு பாடிடலாம்…வாங்க சார் ..கூட்டணிக்கு நல்வரவு..
சரத்: சரி..இப்போ ஏரியா பிரிச்சுக்கலாமா..
கமல்: NSC செங்கல்பட்டு சேலம் எனக்கு… மதுரை திருநெல்வேலி நீங்க எடுத்துக்கோங்க…வெளிநாட்டு உரிமை சாருக்கு கொடுத்துடலாம்..
சரத்: ஐயோ கமல் சார்..இப்போ பட டிஸ்ட்ரிபியூஷன் பத்தி பேசலீங்க..சீட்டு..சீட்டு..
பாரி: சீட்டா..?அதை என் கிட்டே விட்டுடுங்க..BE ன்னா 25L கம்ப்யூட்டருக்கு 40 வாங்கறோம்…எம்பிபிஎஸ் தான் இந்த பாழாப்போன நீட்டால சிக்கலா போயிடுச்சு..1.25 C ன்னா முடிச்சுடலாம்..
சரத்: அட..அதை சொல்லலீங்க ..எம் எல் ஏ தொகுதி இருக்கில்லையா..எலெக்ஷன் வருதே ..அதை சொன்னேன்..
கமல்: ஓ அதுவா..சரி..எனக்கு பரமக்குடி..பூஜாவுக்கு தூத்துக்குடி..
பதறி போகும் சரத்….ஐயோ..தூத்துக்குடி எங்க சமுதாய ஓட்டு லம்பா கிடைக்கிற இடமாச்சே…நானே நிக்கலாம்னு இருந்தேன்..ஏன் அவங்களுக்கு? ..
கமல்: ஹா ஹா..மாமனுக்கு பரமக்குடி மச்சினிக்கு தூத்துகுடின்னு நம்ம படத்துலே ஒரு பாட்டே இருக்குதில்லே…அதை எப்படி மீறமுடியும்..அதுவும் இல்லாம வேலு நாயக்கர் ஆரம்பிச்சதே தூத்துக்குடியில் தானே..இது ரெண்டை தவிர நீங்க எதை எடுத்துக்கிட்டாலும் ஆக்ஷேபணை இல்லை..
சரத்: அப்போ நான் தென்காசி பட்டணத்துல தான் நிக்கணும் (முணுமுணுக்கிறார்..)
கமல்: என்னமோ சொன்னீங்க..சரியா புரியலை..வழக்கமா நான் பேசினா தான் புரியாது..
சரத்: அதை விடுங்க…நம்ம அணி களத்துல இருக்கிறது எல்லாருக்கும் தெரியணும்னா..பெரிய தலையோட மோதணும்..அதுக்கு ஸ்ட்ராங்கா இருக்கணும்னு தான் வேந்தரை கூட்டி வந்திருக்கேன்.
பாரி வேந்தரை மேலும் கீழும் பார்த்துவிட்டு..
கமல்: என்ன சரத்…நீங்க பாடி பில்டர்.. ஸ்ட்ராங் பார்ட்டி…இவர் தொத்தலா இல்லே இருக்கார்..
சரத்: அட கமல் சார்..அதுக்கு அர்த்தம் அப்படி இல்லை..இவரை எங்கே நிறுத்த போறோம் தெரியுமா? கொளத்தூர்..
அதிர்ச்சி அடைகிறார் பாரிவேந்தர்..
பாரி: என்னங்க..என்னை கூட்டிகிட்டு வந்து மாட்டிவிடறீங்க..
சரத்: எல்லாம் காரணமாத்தாங்க…முள்ளை முள்ளால தான் எடுக்கணும்..வைரத்தை வைரத்தால் தான் அறுக்கணும்..
பாரி: ஓ..அப்போ நான் திமுக தலைவர் ரேஞ்சுனு சொல்றீங்க…அப்படி தானே..
கமல்: தளபதியை எதிர்க்க வேந்தரை இறக்கறோமா?
சரத்: அப்படியும் வெச்சுக்கலாம்…விக்கை விக்காலே வீழ்த்தலாம்னும் வெச்சுக்கலாம்..
லேசாக தலை சுழல்கிறது வேந்தருக்கு ..
கமல்: யாரு எங்க நின்னாலும் பரவால்லை…ராதிகாவை திருச்சிலே நிக்க வெக்கறோம்..
சரத்: அது ஏன் திருச்சிலே..
கமல்: சித்தியை திருப்பி போடுங்க… தித்சி.. கிட்டதட்ட திருச்சி வருதா..
சரத்: சரிங்க..யாருக்கு எவ்ளோ தொகுதின்னு பிரிக்காமலே கேண்டிடேட் முடிவு பண்றோமே சரியா வருமா?
கமல்: சரி..நீங்க எவ்ளோ எதிர்பார்க்கறீங்க…வேந்தர் சார் நீங்க..
சரத்: ஒரு 38
பாரி: எனக்கு ஒரு 20..
கமல்: தப்பா நினைச்சுக்க கூடாது..நீங்க வறீங்கன்னு போன் பண்ணி சொன்னதுமே நானே சீனியர்ங்கிற முறையிலே தொகுதி பிரிச்சு வெச்சுட்டேன்..
சரத்(கோபமாக..): அது எப்படீங்க..எங்களை கலந்துக்காம நீங்களா சீட்டு ஒதுக்க இதென்ன திமுகவா..38க்கு ஒரு சீட்டு குறைஞ்சாலும் நாலாவது அணி ஆரம்பிச்சுடுவேன்..
கமல்: ஆத்திரப்படாதீங்க..நீங்க அரசியல்ல சீனியர் நான் சினிமால சீனியர்..இந்தாங்க லிஸ்டு..பார்த்துட்டு சொல்லுங்க..
படித்து பார்த்து இருவரும் மயக்கம் போட்டு விழ.. சரத்தை தண்ணீர் தெளித்து எழுப்புகிறார் கமல்..
சரத்: இது அநியாயங்க..அக்கிரமங்க..
(பாரி வேந்தர் பாடி வேந்தராக இன்னும் படுத்தே இருக்கிறார்..)
கமல்: எது அக்கிரமம்..இது தான் நியாயம் இது தான் முறை..நாட்டாமைக்கு தெரியாத தீர்ப்பா..அவர் மட்டுமல்ல நாமளும் வேந்தர் தான்..மூவேந்தர்னு வேணா வெச்சுக்கோங்களேன்…
சரத்: ஏமாத்துறதுக்கு ஒரு அளவில்லீங்களா..? எங்க கட்சிக்கு 124 சீட் பாரிவேந்தருக்கு 84 சீட் …உங்களுக்கு மட்டும் 26 சீட்டா ..?
கமல்: சரி… உங்களுக்கு 40, வேந்தருக்கு 40
சரத் : அப்படினா 154 உங்களுக்கா ?
கமல்: அப்படியும் சொல்ல முடியாது…தேமுதிக வந்தாங்கன்னா அவங்களுக்கு 152 கொடுத்துட்டு தூத்துக்குடி பரமகுடியோட முடிச்சுக்கலாம்னு இருக்கேன்… ஐயோ…எங்க ஓடறீங்க…
-
Only joke. : No serious🙂