நவ.23ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கூடுகிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம், வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் – மே மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் வியூகங்கள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருகின்றன. வருகிறது. இச்சூழலில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வரும் நவம்பர் 23 (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

திமுக ஆக்கப் பணிகள் என்ற பொருளில் நடைபெறும் இக்கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாக, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!