நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் – சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு

இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு நாளில்கோவிஷீல்டுதடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இன்று இரண்டு மணி நேரம் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள ஒரு மையத்தில் தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும், என்றார்.

 

Translate »
error: Content is protected !!