நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

சென்னை,

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது.

அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய காங்கிரஸ்திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

அது போல் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தலில் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவு நனவாக முடியாத நிலை உள்ளது. இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் பல முறை ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

அது போல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட திமுக எதிர்த்த விஷயங்களை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!