தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் பணபலம், சாதிபலத்தை நம்பித்தான் வேட்பாளர்களை நிறுத்திவருகிறது.
சமூக நீதி பேசும் திராவிட கட்சிகளும் சாதியின் அடிப்டையிலேயே வேட்பாளர்களை நிறுத்திவருகிறது. பொதுத்தொகுதிகளில் சாதி எண்ணிக்கையில் அதிகமானவர்கள் எந்தெந்த சாதிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியை பொருத்தவரையில் எண்ணிக்கையில் அதிகமாக நாடார் இன மக்கள் வசிக்கிறார்கள். இரண்டாவதாக பட்டியலின மக்கள் வசிக்கிறார்கள். அதிமுக, திமுக, சமக, கட்சிகள் அனைத்தும் நாடார் இன வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி பட்டியலின வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் இரண்டாவது பெரும்பான்மையான மக்களின் வாக்குகள் அவர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சிக்கு கடற்கரை ஊர்களில் பெரும் ஆதரவு இருப்பதாலும், பட்டியலின மக்களிலிருந்து ஒருவர் வேட்பாளராக நிற்பதால் பட்டியலின மக்கள் வாக்குகளும் பெரும்பான்மையாக நாம் தமிழர் கட்சிக்கு விழ வாய்ப்பு இருக்கிறது. ராதாபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி களப்பணியை இன்னும் தீவிரப்படுத்தினால் ராதாபுரம் தொகுதியில் வரலாற்று வெற்றியை எட்டும் வாய்ப்பு இருக்கிறது.