பச்சோந்தி அரசியல் இல்லையா?.. கே.பாலகிருஷ்ணன் கேள்வி..!

பச்சோந்தி அரசியல் இல்லையா? – சி. பி. எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி..

அதிமுகபாஜக அணி கடையாணி கழன்று போன வண்டி போல உள்ளது. 10 வருடமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்பதாகத்தான் அதிமுகதேர்தல் அறிக்கை உள்ளது. அதிமுகவின் 11 எம்.பி.,க்கள் ஆதரிக்காவிடில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டமே வந்திருக்காது. அந்த சட்டங்களுக்கு சட்டமன்றத்திலேயே வக்காலத்து வாங்கியது அதிமுக.

தற்போது வீசும் எதிர்ப்பலையால், அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால்அந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் போடுவோம் என்கிறார்கள். நேரத்திற்கு ஏற்ப மாறுவது பச்சோந்தி அரசியல் இல்லையா? 2 புடவை வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல, தமிழகத்தில் உள்ள விமானநிலையங்களை ஏலம் விட போகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதன் முன்னோட்டமாக பிளாட்பார்ம் டிக்கெட்டை 50 ரூபாயாக உயர்த்திஉள்ளனர். மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்துவிட்டால் 100 யூனிட்இலவச மின்சாரம் கிடைக்காது. இவற்றை செய்யும் மோடிக்கு, அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது-கே.பாலகிருஷ்ணன்..

Translate »
error: Content is protected !!