அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு கிராமங்களில் எதிர்ப்பு எழுந்ததால் பிரச்சாரத்தை பாதியில் முடித்து சென்ற தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அதிமுக வேட்பாளர்..
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் நேற்று மாலையில் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களம், குள்ளப்புரம், முதலக்கப்பட்டி, வைகைபுதூர், ஜெயமங்களம் உள்ளிட்ட பகுதியில் வேட்பாளர் முருகன் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…
வாக்கு சேகரிப்பின் போது மக்களிடம் கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து முடிப்பேன் மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள அனைத்தையும் மக்களுக்கு கொண்டு வந்து சேர்பேன் என மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்…
மேல்மங்களம் பகுதியில் பிரசாரத்தை முடித்து 8 மணிக்கு வடுகபட்டியும், 8.30க்கு மணிக்கு தாமரைக்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டம் போடப்பட்டிருந்த நிலையில் வடுகபட்டி மற்றும் தாமரைக்குளம் பகுதியில் ஒரு சமூகத்தினர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த வந்த தகவலை தொடர்ந்து அங்கு 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில்,
பிரசாரம் செய்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதை அறிந்த அதிமுக வேட்பாளர் முருகன் மேல்மங்களத்தில் பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்தில் இருந்து இரங்கி தனது காரில் சென்றார். அதிமுக வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பால் பிரச்சாரத்தை பாதியில் முடித்து கொண்டு சென்றது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது…