புதிய கட்சி துவங்கிய அர்ஜுன மூர்த்தி… ரஜினிகாந்த் ஆதரவா..?

சென்னை,

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் அர்ஜுன மூர்த்தி துவங்கியுள்ள தனிக் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என்ற எதிர்பார்ப்பில், பாஜகவிலிருந்து பிரிந்து வந்து அங்கு சேர்ந்தார் அர்ஜுன மூர்த்தி. துவங்காத அந்த கட்சியின் சூப்பர்வைசர் பதவியை இவருக்கு தந்தார் ரஜினி. ஆனால் ரஜினிகாந்த் திடீரென கட்சி துவங்கும் தனது முடிவை வாபஸ் பெற்றார்.

ரஜினி கட்சி தொடங்காத காரணத்தினால் அவர் கட்சியில் இருந்து வெளிவந்த நிலையில் எந்த கட்சியிலும் சேராமல் தனியாக இருந்து வந்தார் அர்ஜுன மூர்த்தி. ஆனால் தனியாக அவர் கட்சி தொடங்கப்போவதாக சில நாட்களுக்கு முன்பு கூறினார்.

ஆனால் அவர் தொடங்கும் கட்சிக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அந்த மன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது கட்சி துவங்க உள்ள அர்ஜுன மூர்த்திக்கு, ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” “அன்புடன் ரஜினிகாந்த்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அர்ஜுன மூர்த்தி கட்சிக்கு ரஜினி ஆதரவு எனக் கொள்வதா, வெறும் வாழ்த்து மட்டுமே என்று இதை எடுப்பதா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ரஜினிக்கு நெருக்கமானவர்களோ, இதை ஆதரவு என எடுக்க கூடாது. நட்பு அடிப்படையிலான வாழ்த்து என எடுக்க வேண்டும் என்கிறார்கள். சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு, அவரின் உடல்நிலையை போன் போட்டு விசாரித்துள்ளார் ரஜினி. இதை டிடிவி தினகரன் வெளிப்படையாக தெரிவித்தார். அனைத்து தரப்பினரிடமும் நட்பை பாராட்ட ரஜினி விரும்புகிறார். எனவே அர்ஜுனமூர்த்தி அரசியல் கட்சிக்கு ரஜினி ஆதரவு தருவார், வாய்ஸ் தருவார் என்பது நடக்காது என்கிறார்கள் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.

 

Translate »
error: Content is protected !!