புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இன்றுடன் ஊரடங்கு முடிவையும் நிலையில் புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் பூங்கா காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சி செய்ய திறந்திருக்கும். பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்குகிறது.