புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக முதல்வர் முக்கிய வேண்டுகோள்!

புயல் கடக்கும் அபாயம் உள்ளதால், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக மாறும்; நாளை மறுநாள் புதுச்சேரி அருகே கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. 

இந்த நிலையில், புயல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். வரும் 24ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் இருக்கும் என்பதால், புயல் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.


அதேபோல், அத்தியாவசியப் பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றைப் போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மெலும், மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.  வீடுகளில் மின்சாதனப் பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று, முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.

Translate »
error: Content is protected !!