ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல்கள் அடக்கப்படுகின்றன. சில தனிநபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? நாங்கள் தொடர்ந்து கேள்வி கேட்கிறோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் தலையிடவில்லை; நாங்கள் எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம். பெகாசஸ் மென்பொருள் பிரச்சினை குறித்து விவாதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக்கூடாது? இந்தியா போன்ற ஒரு ஜனநாயக அமைப்புக்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும் அமித்ஷாவும் ஏன் உபயோகப்படுத்தினர்” என்றார்.