தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு குறித்தும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் பணி குறித்த அஇ அதிமுக தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், தேனி மாவட்டம் ஒரு சிறப்பு மிகுந்த மாவட்டமாகும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆகியோரை முதல்வர்களாக ஆக்கிய மாவட்டம் இந்த தேனி மாவட்டம். அதேபோன்று நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தமிழகம் முழுவதும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து இந்திய அளவில் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்கச் செய்தது இந்த தேனி மாவட்டம்ட்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஜெயலலிதா கூறியது போன்று இந்த அஇ அதிமுக ஆட்சிதான் மலரும் என்றும் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் கூறினார். மேலும் நமது இயக்கத்தில் இருந்து சிறிது காலத்திற்கு முன்பு ஒருவர் வெளியேறிச் சென்று நமது இயக்கத்தை பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பற்றி நான் இதுவரை எந்த கருத்தும் கூறியதில்லை. ஆனால் இந்த கூட்டத்தில் கூறுகிறேன் பொதுவாக அவர் நல்லவர் இல்லை என்று கூறினார்.நான் ஜமீந்தாரோ, மிட்டா மிராசோ, நிலச்சுவான்தாரோ அல்ல சாதாரண தொண்டன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மாவட்ட இணை செயலாளர் முருக்கொடை ராமர் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக ஊராட்சி செயலாளர் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்