பெரிய ஏமாற்றத்தில் டிடிவி தினகரன்…! காரணம் யாரு..?

சென்னை,

டிடிவி தினகரன் பெரிதும் நம்பிய ஒரு விஷயம் நடக்காமல் போய் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேமுதிக தற்போது அமமுகவின் கூட்டணியில் இணைந்துள்ளதால் அமமுக புதிய பலம் பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகளை பெரிய அளவில் அமமுக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று வெளியான புதிய தலைமுறை கருத்து கணிப்பு அமமுகவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது. நேற்று புதிய தலைமுறை வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்குமென்று கூறப்பட்டது.

 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 இடங்கள் பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று நேற்று புதிய தலைமுறை கருத்து கணிப்பு வெளியிட்டு இருந்தது. அதிமுக அணிக்கு 76 முதல் 83 இடங்கள் கிடைக்கும் என்று இந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் சசிகலா ஆதரவு அளிக்கும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு வாய்ப்பு எப்படி இருக்கும் என்று இதில் கேள்வி கேட்கப்பட்டது.

அதன்படி சசிகலா ஆதரவு அளிக்கும் கட்சிக்கு தமிழக சட்டசபை தேர்தலில் 1.09% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில் மட்டுமே சசிகலா ஆதரவு தரும் கட்சிக்கு 2.17% வாக்குகள் உள்ளது. வேறு எங்கும் சசிகலா ஆதரவு அளிக்கும் கட்சிக்கு 2% வாக்குகள் கூட இல்லை.

அதேபோல் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதிலும் சசிகலாவிற்கு 1.33% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது மேலும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக ஆதரிக்கவில்லை என 45.64% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக ஆதரிக்கிறேன் என 2.25% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் சசிகலாவிற்கு கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி. எங்கும் பெரிய அளவில் ஆதரவு அலை வீசுவது போல தெரியவில்லை. தேர்தலுக்கு பின்பாவது இவருக்கு ஆதரவு அலை உருவாகுமா என்பது சந்தேகம்தான்.

சிறையில் இருந்து சசிகலா திரும்பி வந்தால் எல்லாம் மாறிவிடும்.. மீண்டும் அதிமுகவை கைப்பற்றிவிடுவார் என்றெல்லாம் டிடிவி தினகரன் நம்பிக்கொண்டு இருந்தார். இதனால்தான் சசிகலாவின் தமிழக வருகையும் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருந்தது. ஆனால சசிகலா வந்த பின் எதுவும் நடக்கவில்லை. மொத்தமாக அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சசிகலா அறிவித்துவிட்டு தற்போது கோவில் குளமாக சுற்ற தொடங்கி உள்ளார். குறைந்தபட்சம் சசிகலா தனது அமமுக கட்சிக்கு ஆதரவு தருவார் என்று தினகரன் நம்பிக்கொண்டு இருந்தார். சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்.

அமமுகவிற்கு எப்போதும் சசிகலாவின் ஆதரவு இருக்கும். தேர்தலில் சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான் என்று வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால் தற்போதுவரை சசிகலா ஆதரவு என்று எதுவும் சொல்லவில்லை. அமமுக பற்றி சசிகலா வாயை கூட திறக்கவில்லை. இதுவே தினகரனுக்கு பெரிய ஏமாற்றம் அளித்தது. தற்போது சசிகலா ஆதரவு கொடுத்தாலும் கூட பெரிய அளவில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார் என்று தற்போது கருத்து கணிப்பும் தெரிவிக்கிறது.

இது தினகரனுக்கு இன்னொரு பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது. இதனால் சசிகலா ஆதரவு இருந்தாலும் தினகரன் பெரிய மேஜிக் நிகழ்த்துவார் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.கருத்துக்கணிப்பின் படி தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யத்தை விட சசிகலாவிற்கு குறைவான ஆதரவே உள்ளது. இது தினகரனுக்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. பவர் புல் நபராக சசிகலா வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலாவிற்கு அப்படி எந்த பலமும் இல்லை கருத்து கணிப்பு சொல்கிறது. சசிகலாவின் வருகையை நம்பி இருந்த அமமுக நிர்வாகிகளுக்கும், தினகரனுக்கு இது பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது.

Translate »
error: Content is protected !!