பொங்கல் பரிசு பொருள்களை பெருவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. முன்னதாக வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு கடையில் முற்பகலில் 100 பேருக்கும்,
பிற்பகலில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு, பரிசுத் தொகை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் வாங்க இயலாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு, பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், இவை இரண்டும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.