ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்கு வழங்கப்பட்ட பொது இடத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியத்தை கண்டித்தும் பொது மக்கள் கோட்ட ஆட்சியர் அலுவல்கத்தை முற்றுகை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அவர்கள்கான குடியிருப்பு பகுதி வழங்கப்பட்ட போது ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பொது சுகாதார நிலையம், உள்ளிட்ட பயண்பாட்டிற்காக 50 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்தும் அதை சட்ட விரோதமாக அரசு அதிகாரிகளின் துணை கொண்டு பட்டா பெற்றுள்ளதாக குற்றம் சாட்டி பெரியகுளம் கோட்ட துணை ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு பொது பயண்பாட்டிற்கு ஒதுக்கிய இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதில் மக்களின் பயண்பாட்டிற்கு பொது சுகாதார நிலையத்தை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.