இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைமுடுக்கிவிட்டுள்ளன. அதேபோல், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்;
பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினி (அல்லது) சோப்பைக் கொண்டு கழுவ வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்களை அரசுகள் வழங்கி வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மேலும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் அனைத்து மருத்துவமனைகளுக்கு வெளியேயும் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், இதன் காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருவது பொதுமக்கள் மட்டுமல்லாதுஅனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் நடிகர் பாண்டு, பாடகர்கோமகன் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு செய்யப்பட்ட கொரோனா மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்துஅவர், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.