மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (30.1.2021) சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார் எடப்பாடி பழனிசாமி.