*சங்கரன்கோவில் அடுத்த வல்லராமபுரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! அதிமுக அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு..
*தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..
*கேஸ், பெட்ரோல்– டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல: நடிகை கவுதமி.
*அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், திருமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார்..
*கோவை தெற்கு தொகுதியில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்.. திமுக உருவானது காலத்தின் கட்டாயம், தற்போது அதை அகற்றுவதும் காலத்தின் கட்டாயமே மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது – கமல்ஹாசன்..
*தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியை அதிகளவிலான பெண்கள் படிக்க வேண்டும்–குடியரசுத் தலைவர்..
*ஐபோன் 12 பாக்ஸ் உடன் சார்ஜர் வைக்க தவறியதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு 14 கோடி ரூபாய் அபராதம்
*22 ஆம் தேதி மார்ச் 2021 இன்று உலக தண்ணீர் தினம்.. நமது குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே தண்ணீரை சேமிக்க கற்றுக்கொடுப்போம் வருங்கால தலைமுறைக்கு தண்ணீரை பரிசளிப்போம் . மரங்கள் நடவு செய்து மழையை பெறுவோம்!!!
*திமுக ஆட்சியின் போது தமிழக உரிமை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்
*கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதி..
*பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி: மேற்கு வங்கத்தில் அமித் ஷா வாக்குறுதி… மேற்கு வங்கத்தில் பாலர் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஐக மூத்த தலைவருமான அமித் ஷா வாக்குறுதி..