மக்களை ஏமாற்றவே எய்ம்ஸ் குழு அமைப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொதுமக்களை ஏமாற்றவே எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது; அதில் சர்ச்சைக்குரிய ஆர்.எஸ்.எஸ். நபர் சேர்க்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக சார்பில் ‘தமிழகத்தில் மீட்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம், புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 600 இடங்களில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சென்னையில் இருந்தவாறே, காணொலி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் தான், அதிகரிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு தவறான கணக்கை காட்டி வருகிறது. சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரோ, கொரோனா பயத்தை வைத்து படம் காட்டி வருகிறார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதாக கூறப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மக்களை ஏமாற்றுவதற்காக நிர்வாகக்குழுவை அமைத்துள்ளனர். இந்த குழுவில் மதுரையைச் சேர்ந்த எம்.பி.க்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், சர்ச்சைக்கு உள்ளான ஆர்எஸ்எஸ் நபரை நியமித்துள்ளனர்.

எதிர்ப்புக்கிடையே நிறைவேறியுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வில் காரிருள் சூழ்ந்துள்ளது. விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என்று ஸ்டாலின் பேசினார்.

Translate »
error: Content is protected !!