மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு – எடப்பாடி உத்தரவு

சென்னை,

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக்கால்வாயின் 4வது ரீச்சில் உள்ள 10வது மடை வழியாக திசையன்விளை, இராதாபுரம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளிலுள்ள சுவிசேசபுரம் குளம், புதுக்குளம் கல்குளம், நந்தன்குளம், செங்குளம், முதலாளிகுளம், குருவிசுட்டான் குளம், அப்புவிளைகுளம், எருமைகுளம், அவிச்சான்குளம், இலகுளம் மற்றும்

கடகுளம் ஆகிய சிறப்பு குளங்களுக்கும் ஆயங்குளம் மற்றும் ஆணைக்குடி படுகைகளுக்கும் வினாடிக்கு 50 கன அடிவீதம் 3–ந்தேதி (நாளை) முதல் 28–ந்தேதி வரை 25 நாட்களுக்கு குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் மற்றும் திசையன்விளை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டம் ஆகிய வட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

Translate »
error: Content is protected !!