மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் போது, அமைச்சரவை விரிவாக்கப்படும் என்ற தகவலைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மந்திரி சபை விரிவாக்கம் செய்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் மந்திரி சபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.