மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
This is to inform you all that I have tested COVID positive today. I am taking medication & treatment as per the advice of my doctors.
Request all those who have come in my contact recently to be observant, and get themselves tested.— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 21, 2021
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதித்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.