பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் கருத்துகளை கொண்டுள்ள மனு நீதி நூலை தடை செய்ய வலியுறுத்தி, பரமன்குறிச்சியில் விசிகவின் இளஞ்சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பஜாரில் நடைபெற்ற இளஞ்சிறுத்தைகளின் கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி இராவணன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரகுவரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன் பங்கேற்றனர்.
அதேபோல், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர், தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஒன்றிய அமைப்பாளர் சிவநாதன், மாநாடு முகாம் இளஞ்சிறுத்தைகள் ஆத்திமுத்து, சுதாகர், முந்திரிதோட்டம் முகாம் தோழர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் கருத்துகளை கொண்டுள்ள மனு நீதி நூலை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது, அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்து பின்விடுவித்தனர்.
இளஞ்சிறுத்தைகள் அமைப்பினரின் இந்த போராட்டத்தால் பரமன்குறிச்சி பஜாரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
—