பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பு…
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் தனது பிரசாரத்தை பெரியகுளம் வடகரை பகுதியில் போக்குவரத்து பணிமனை முன்பு துவங்கினார்.
இதில் புதிய பேருந்து நிலையம் அரவணைப்பு பாரஸ்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் மக்களிடம் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்., அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 1500 ரூபாய் மற்றும் வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் எனவும் பெரியகுளத்தின் சொந்தகாரரான ஓபிஎஸ் முதன் முதலில் வெற்றி பெற செய்தது போன்று தானும் இந்த மன்னூக்கு சொந்தகாரரான என்னையும் வெற்றி அடைய செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இதில் பெரியகுளம் நகர செயலாளர் ராதா ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நகர துணை செயலாளர் அப்துல் சமது நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜவேல் கூட்டுறவு சொசைட்டி தலைவர் அன்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…