மாநிலங்களில் 2.51 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்களில் 2.51 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதை பற்றி வெளியிட்ட செய்தியில், இதுவரை 39,59,21,220 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 41,10,38,530 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களில் 2,51,62,572 தடுப்பூசிகள் உள்ளன. 30,250 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 52,90,640 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி போடுவதற்கான திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!