மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 45.37 கோடிக்கு மேல் (45,37,70,580) தடுப்பூசி அளவை இலவசமாக வழங்கியுள்ளது. கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படும்.
மொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசிகள் (கழிவுகள் உட்பட) பயன்படுத்தப்பட்டன. சுமார் 3.29 கோடி (3,29,38,559) தடுப்பூசி அளவுகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் வசம் உள்ளன. ” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தது.