மியான்மரில் மக்கள் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல்..! 18 பேர் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்ததால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

மியான்மரில் பிப்ரவரி 1ம் தேதி ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

யாங்கூன், தாவெய், மாண்டலே ஆகிய முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியத்துடன் துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் 18 போராட்டக்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காட்சிகள் பலவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. உயிரிழந்த இளைஞரின் உடலை போராட்டக்காரர்கள் தூக்கி செல்வது, ரத்த காயம்பட்ட பலரை காவல்துறையினர் அடித்து விரட்டுவது போன்ற காட்சிகள் ராணுவத்திற்கெதிரான கொத்தளிப்பான சூழலை உருவாக்கியுள்ளன. இதனால் மக்கள் மீதான ராணுவத்தின் ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Translate »
error: Content is protected !!