மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா? முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை

கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்; பாதிப்பு அதிமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை உருக்குலைய வைத்துவிட்டது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பாதிப்பு அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.

கொரோனா பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. எனினும் முற்றிலும் கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நாளை (24.11.2020) மீண்டும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகலுடன், தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்தும் பிரதமர் மோடி விவாதிப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், வட மாநிலங்களின் பல நகரங்களில் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!