டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதன் காரணமாக அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை பற்றி ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார். எண்களின் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுகிறது. இந்திய ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கமும் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான ட்விட்டர் கணக்கில் “ சத்யமேவ ஜெயதே” என்ற வாசகம் ஆங்கிலத்தில் டுவிட் செய்யப்பட்டுள்ளது.