முதலில் கோரோனோ தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ளவேண்டும் – தேஜ் பிரதாப் யாதவ்

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ள வேண்டும் என தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்  பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்ட நிலையில், உள்ள  கோவேக்சின் மருந்துக்கு எந்த அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன

இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக் கொண்ட பிறகு நாங்கள் செலுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்  யாதவ், தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Translate »
error: Content is protected !!