முதல்வரை விமர்சனம் செய்து பேசியதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ. ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

முதல்வரை விமர்சனம் செய்து பேசியதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் . ராசா மீது சென்னை மத்திய  குற்றப்பிரிவு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி வழக்கில் திமுகவின்  சம்பந்தம் குறித்தும், சர்க்காரியா கமிஷன் விசாரணை குறித்தும் சுட்டிக்காட்டி  பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் .ராசா, ‘‘மறைந்த உங்கள் தலைவி ஊழல் வழக்கு தொடரப்பட்டு  சிறைக்கு சென்றார். உங்கள் கட்சியில் தான் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்கள் உள்ளனர். டில்லி சுப்ரீம் கோர்ட்டே   உங்கள் தலைவியை பற்றி குறிப்பிட்டுள்ளது, ஆனால் 2 ஜி வழக்கில் நானே வாதாடி குற்றமற்றவன் என வெளியில்  வந்துள்ளேன். வேண்டுமானால் தலைமைச் செயலகம் வருகிறேன், முதல்வர் என்னுடன் வழக்குகள் பற்றி விவாதிக்க தயாரா?” என்று ஆவேசமாக சவால்விட்டார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ‘‘.ராசா எல்லாம் பெரிய ஆள் இல்லை? அவருடன் நாங்கள் ஏன்  விவாதிக்க வேண்டும்என்று காட்டமாகப் பதிலளித்தார். . ராசா முன்னாள்  ஜெயலலிதாவைப் பற்றி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் செல்வக்குமார் சார்பில்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரைப் பற்றி தரக்குறைவாக பேசிய . ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையில் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து . ராசா மீது 153 (கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது), 505 (1)(பி) (அரசுக்கு எதிராக பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசுவது) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவை இரண்டும் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால் . ராசா கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Translate »
error: Content is protected !!