அப்துல் கலாமின் மூத்த சகோதரர் வயது முதிர்வு காரணமாக அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இல்லத்தில் வசித்து வந்த அவரது மூத்த சகோதரரான 104 வயதுடைய முத்துமீரான் மரைக்காயர்
வயது முதிர்வு காரணமாக அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
1917 ஆண்டு பிறந்த இவர் 104 வயது வரை தனது பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு வருட வருடம் இவர் சென்று மலர் தூவி துவா ஓதி மரியாதை செய்வார் இவரை காண்பதற்கு கலாம் இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வந்து அவரை நலம் விசாரித்து செல்வார்கள் மேலும் இவரது மறைவிற்கு நாளை அரசு துறை சார்ந்த அலுவலர்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது இல்லத்திற்கு இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த வண்ணம் உள்ளன, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உடன்பிறந்த நான்கு சகோதரர்களில் உயிருடன் இருந்த சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவருக்கு மொத்தம் 5 பெண் பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் வெளியூர்களிலிருந்து அவர்கள் வரும் காரணத்தால் நாளை 12 மணி அளவில் முகமது முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அவருடைய இறுதி சடங்கானது துவா ஓதி நடக்க உள்ளதாக அவரது பேரன் ஷேக் சலீம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்தாத்தா அவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்திற்கு பேரிழப்பாக காணப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.