முழு உரையை கேட்காமல் என்மீது பழி போடுவதா? திருமாவளவன் கேள்வி

எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்காமல், பெண்களை பற்றி அவதூறாக பேசுவதாக கூறுவதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் க்தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றி இருந்தார். அப்போது இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால் குற்றச்சாட்டுகளை மறுத்த திருமாவளவன், தாம் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனிக்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றார்.

பின்னர் பேட்டியளித்த திருமாவளவன் கூறியதாவது: பெண்களை நான் இழிவுபடுத்துவதாக வேண்டுமென்றே சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். எனது 40 நிமிட உரையை பெண்கள் அனைவரும் கேட்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டம் என் மீதுள்ள பழியை துடைப்பதற்காக அல்ல; பெண்கள் மீதான இழிவை துடைக்கும் போராட்டமாகும். மனுதர்ம சாஸ்திரத்தை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோர் ஏற்கனவே பொது வெளியில் வைத்து எரித்துள்ளனர். என் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று திருமாவளவன் கூறினார்.

Translate »
error: Content is protected !!