மூடப்பட்ட திருச்சி காந்தி மார்கெட் திறக்கப்பட்டது – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்

கொரோனா பரவல் காரணமாக திருச்சியின் புகழ்பெற்ற காந்தி மார்கெட் கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது.இதனிடையே காந்தி மார்க்கெட்டை முழுமையாக மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். பல்வேறு தளர்வுகள் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மூடப்பட்ட மார்கெட்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் காந்தி மார்கெட் தொடர்பான  விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த காரணத்தால் காந்தி மார்கெட் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.
காந்தி மார்கெட்டை திறக்க வேண்டும் என வியாபாரிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை காந்தி மார்கெட்டை திறக்க அனுமதி வழங்கியது.அதனையடுத்து இன்று காந்தி மார்கெட் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மார்கெட்டை திறந்து வைத்தார்.தொடர்ந்து மார்கெட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,காவல் துறை ஆணையர் லோகந்தான் மற்றும் வியாபாரிகள் கலந்த கொண்டனர்.மார்கெட்டை திறக்கும் போது வெடி வெடித்தும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் வியாபாரிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காந்தி மார்கெட் திறக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் தங்கள் கடைகளை திறந்து சுத்தம் செய்ய துவங்கினர்.மாநகராட்சி சார்பில்  மார்கெட் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்பு ஆலோசனை செய்து காந்தி மார்கெட் செயல்படுவது அறிவிக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். எட்டு மாதங்களுக்கு பிறகு காந்தி மார்கெட் திறந்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,தங்கள் தாய் வீட்டிற்கு வந்த உணர்வை தருவதாகவும்,கொரோனா காரணமாக அரசு என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Translate »
error: Content is protected !!