இந்நிகழ்வில் பிரதமர் மோடி பேசியது. இந்திய விஞ்ஞானிகள் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளனர். விஞ்ஞானிகளால் நாடு பெருமை கொள்கிறது.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்க உள்ளது. உலகளாவிய தேவை மட்டுமல்லாமல், ‘மேக் இன் இந்தியா‘ தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். தரம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் இந்திய தயாரிப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன், இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும்.
சர்வதேச தரத்துக்கு இணையான தர உத்தரவாதத்தை வழங்குவதற்கான ஆய்வக பரிசோதனை மற்றும் மேம்பாட்டுக்கு மாநில நிர்தேஷக் திரவியா ஆதரவு அளிக்கும். காற்று மற்றும் தொழிற்சாலை மாசு கண்காணிப்பு தளவாடஙகளின் சான்றளிப்பில் தற்சார்புக்கு தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகம் உதவும்.