ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது :

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாக கொண்டு ராகுல்காந்தி பரப்புரை செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதை ஏற்க முடியாது என அழகிரி கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் மத்திய அமைச்சர் .வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!