நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்:
இன்று நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்தார், அதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை,
காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கொளரவித்தார். இதனையடுத்து, வருவாய்த்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, குடிசை மாற்று வாரியத்துறை, தோட்டக்கலைத்துறை,வேளாண்மைதுறை,மாவட்ட விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக,29,59,122 மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில்,ராமநாதபுரம் காவல் சரக துணைத்தலைவர் மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி,மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் பங்கேற்றனர்.