பிரச்சாரம் நேரம் முடிந்ததால் பிரச்சாரத்திற்கு வந்த டிடிவி தினகரன் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு பேசாமல் சென்றதால் அரை மணி நேரமாக காத்திருந்து தொண்டர்கள் ஏமாற்றம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அமமுக வேட்பாளர் மருத்துவர் கதிர்காமுவை ஆதரித்து வாக்கு சேகரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று இரவு 9 மணிக்கு காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி இருந்தனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைப்பு வரவேற்பதற்காக பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி மேற்கு ஒன்றிய செயலாளர் குள்ளபுரம் கணேசன் நகர செயலாளர் சந்தானம் ஆகியோர் தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்..
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு வருவதற்க்கு நேரம் ஆன நிலையில் மாலை 7 மணி முதல் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் 3அரை மணி நேரமாக காத்திருந்தனர். இந்நிலையில் டிடிவி தினகரன் இரவு 10 மணிக்கு மேல் ஆன நிலையில் 10.15 மணிக்கு பிரச்சார வாகனத்தில் வந்தார்..
ஆனால் இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய தேர்தல் விதிமுறை இருந்ததால் இரவு 10.15 மணி ஆனதால் டிடிவியின் பிரச்சாரத்திற்கு வந்திருந்த தொண்டர்களை பார்த்து பிரச்சார வாகனத்தில் நின்றவாரு தொண்டர்களை பார்த்து கை அசைத்து எதுவும் பேசாமல் கடந்து சென்றார். பிரச்சார நேரம் முடிந்த பின் டிடிவி தினகரன் வந்து பிரச்சாரம் செய்யாமல் போனதால் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.