தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வகை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. மாநிலங்களுக்கு இடையிலான அரசு போக்குவரத்து கழக சேவைகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.
எனினும், பல கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதிக்கு பிறகு, மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 31ம் தேதி முதல் இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு பேருந்து இயங்கின. பின்னர் நவம்பர் 16ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் – ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை தொடர, அரசு அனுமதி தந்துள்ளது. ஆந்திர முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் -ஆந்திரா இடையே இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.