விஜயகாந்த் உடல் நிலை குறித்து தேமுதிக தலைமை அலுவலகம்  வெளியிட்டுள்ள செய்தி..?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3:30 அளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:-

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான  மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து  விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!