விருதுநகரில் ரூ.45.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் பழனிசாமி

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

தென் மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும், அரசு திட்டங்களின் செயல்பட்டுகள் குறித்தும், மாவட்ட உயர் அலுவலர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆய்வு நடத்தினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த இக்கூட்டத்திற்கு, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு நடந்த அரசு விழாவில், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்டவற்றின் சார்பில் ரூ.28.74 கோடி மதிப்பிலான 30 முடிவுற்ற திட்டப்பணிகளை, முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அத்துடன், பொதுப்பணித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு தெ

ற்கு காவல் நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலை ஓரத்தில் கையில் மனுவுடன் மாரீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த முதல்வர் பழனிச்சாமி, மாரீஸ்வரியிடத்தில் என்னவென்று விசாரித்துள்ளார்.

அப்போது, மாரீஸ்வரி தனக்கு அரசு வேலை கேட்டு முதல்வரிடத்தில் மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட முதல்வர், 2 மணி நேரத்துக்குள் சுகாதார துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கணினி பிரிவில் பணி வழங்க நடவடிக்கை எடுத்தார். உடனடியாக பணிய நியமன ஆணையும் மாரீஸ்வரிக்கு வழங்கப்பட்டது. மனு கொடுத்த 2 மணி நேரத்தில் பணி ஆணையை பெற்ற மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!